கூட்டமைப்பின் முரண்பாடு – வடக்கில் மல்யுத்தம் - Sri Lanka Muslim

கூட்டமைப்பின் முரண்பாடு – வடக்கில் மல்யுத்தம்

Contributors

(GTN)

தமிழ் தேசியக் கூட்டமைபபினருக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை இலங்கை அரச பத்திரிகை வடக்கில் மல் யுத்தம் என்று எழுதியுள்ளது. இலங்கை அரச பத்திரிகைகளும் சில சிங்களப் பத்திரிகைகளும் கூட்டமைப்புகள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை தாராளமாகப் பிரசுரித்து வருகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் வெற்றி ஈட்டிய பொழுது அந்த செய்திக்கு சிங்களப் பத்திரிகைகளும் அரச பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக கூட்டமைப்புக்குள் அமைச்சுக்குப் போட்டி என்ற செய்தியை தெற்குப் பத்திரிகைகள் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வருகின்றன.

நல்லிணக்கத்திற்காகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவி ஏற்க முடிவு எடுத்தாகவும் அதில் எந்தத் தவறும் இல்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்  தெரிவித்துள்ளதாகவும் அரச பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுடன் மோதி மக்களுக்கு பணிகளை ஆற்ற முடியாது என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முழு நாட்டிற்கும் ஜனாதிபதி என்றும் சம்பந்தர் தெரிவித்துள்ளதாகவும் அரசாங்கப் பத்;திரிகை தனது மும்மொழிப் பிரதிகளிலும் செய்திகளை வெளியிட்டுள்ளது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல குறித்த தெற்குப் பத்திரிகைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள இரண்டு தரப்புக்களின் செய்திகளையும் வெளியிட்டுள்ளது. இதனால் வாக்களித்த தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும் அதன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team