கூட்டுக் குறைப்பு நடைபெறாமல் இருந்திருந்தால்...?? - Sri Lanka Muslim

கூட்டுக் குறைப்பு நடைபெறாமல் இருந்திருந்தால்…??

Contributors
author image

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

தற்போது நடைபெற்று முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் தேர்தலில் அரசாங்கம் வெற்றியடைந்து விட்டதாக கூறி வருகிறது.உண்மையில்,இம்முறைத் தேர்தலின் போது பதுளை மாவட்ட 3 ஆசனங்களை குறைத்து மொனராகல மாவட்டத்திற்கு 3 ஆசனங்கள் அதிகரிக்கப் பட்டது.இக் கூட்டுக் குறைப்பானது அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுசெய்யப்பட்ட ஒன்று என பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தது.மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி இது சிறு பான்மை இன பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான சூழ்ச்சியா??என சந்தேகம் வெளி இட்டு இருந்தார்.எது எவ்வாறு இருப்பினும் இன்று அரசை ஒரு மிகப் பெரிய இக்கட்டான சூழ் நிலையில் இருந்து தப்பிக்கச் செய்திருப்பது இக் கூட்டுக் குறிப்பே!

 

முன்பு போன்று பதுளை மாவட்டத்திற்கு 21 ஆசனங்களும்.மொனராகல மாவட்டத்திற்கு இற்கு 11 ஆசனங்களும் இருந்திருந்தால் பதுளையில் upfa  10 ஆசனங்களையும்,unp  10 ஆசனங்களையும்,jvp 1 ஆசனத்தையும் கைப் பற்றி இருக்கும். மொனராகலையில் upfa 6 ஆசனங்களையும்,unp 4 ஆசனங்களையும்,jvp 1 ஆசனத்தையும் கைப் பற்றி இருக்கும்.upfa =16 ஆசனங்கள்,unp + ஜேவிபி = 16 ஆசனங்கள்.

 

போனஸ் ஆசனமே அரசாங்க ஆட்சி அமைப்பிற்கு  வழி வகுத்திருக்கும்.மேலும்.இவ்வாறு நடைபெற்றிருந்தால் ஜனாதிபது பொது வேட்பாளர் கருத்திற்கு மிகச் சிறந்த அடித்தளமாக அமைந்திருக்கும்.இப்போதும் இத் தேர்தல் முடிவு பொது வேட்பாளர் மூலம் அரசை வீழ்த்தலாம் என்பதையே சுட்டி நிற்கிறது. .

Web Design by Srilanka Muslims Web Team