கூட்டு ஸகாத் உருவாக்கிய வீடுகள் கையளிக்கும் நிகழ்வு - Sri Lanka Muslim

கூட்டு ஸகாத் உருவாக்கிய வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

Contributors

(எப் .எம்.பர்ஹான்)

கிழக்கு மாகாணத்தில் இயங்கும் நிறுவனங்களில் பழமைவாய்ந்த நிறுவனமாகத் திகழும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் மஜ்லிஸுல் ஸுறா கூட்டு ஸகாத் நிதியத்தினால் தற்போது புதிய காத்தான்குடி நூராணியா மையவாடி

 

வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் 2வது வீட்டுத்திட்ட 8 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 22-11-2012 திகதி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்ஆ  தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின கூட்டு ஸகாத் நிதியத்தின் செயலாளர் ஏ.எம்.சாதிக்கீன் தெரிவித்தார்.

சம்மேளனத்தின் தலைவரும், கூட்டு ஸகாத் நிதியத்தின் பிரதித் தலைவருமான எம்.ரி.எம்.ஹாலித் ஜேபி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team