கெசினோ சூதாட்ட சட்டமூலத்தை வாபஸ்​பெற அரசாங்கம் தீர்மானம் » Sri Lanka Muslim

கெசினோ சூதாட்ட சட்டமூலத்தை வாபஸ்​பெற அரசாங்கம் தீர்மானம்

casi

Contributors

கெசினோ சூதாட்ட சட்டமூலத்தை வாபஸ்​பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் நேற்று இரவு கெசினோ சட்டமூலத்தை தற்காலிகமாக வாபஸ்பெற தீர்மானித்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் கெசினோ சூதாட்ட மையங்களை அமைப்பது குறித்து அரசாங்கம் பாராளுமன்றில் சட்டமூலமொன்றை முன்வைக்க தீர்மானித்திருந்தது.

எனினும் இந்த சட்டமூலத்திற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் மற்றும் மத முக்கியஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 24ஆம் திகதி கெசினோ சட்டமூலம் பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்தது. .

Web Design by The Design Lanka