கெளரவ றிஷாதும் தொடரும் தடுப்பு காவலும்..! - Sri Lanka Muslim

கெளரவ றிஷாதும் தொடரும் தடுப்பு காவலும்..!

Contributors

நேற்று (05/10/2021) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கெளரவ றிஷாட் பதியுத்தீன் அவர்களின் வழக்கு விசாரணை அரச தரப்பு சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருக்காதன் காரணமாக மீண்டும் எதிர்வருகின்ற 8ம் திகதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்பது சட்டத்துறையில் ஒர் எடுகோலாகும். காலமும், நேரமும், அலைகளும் எக்காரணம் கொண்டும் தாமதிப்பதில்லை. இயற்கை தமது கடமையைச்செவ்வனே செய்து
கொண்டேயிருக்கின்றது.

வேதாளம் முருங்கை மரத்தில் திரும்பவும் ஏறிக் கொண்ட கதையைப் பலரும் படித்திருப்பார்கள். நீதியின் கண்களில் ஒளி உண்டு. நீதித்துறையில் நம்பிக்கையும் நமக்குண்டு. மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த தலைவன் இறையருளால் வெளிவருவான்.

உலகின் விடுதலைப் போராளிகளில் பலர் சிறைவாசம் சென்றவர்களாகவே உள்ளனர். லிபியாவின் விடுதலை வீரன் உமர் முக்தாரும், தென்னாபிரிக்க சுதந்திர வீரன் நெல்சன் மண்டேலாவும், இந்திய, விடுதலைக்காக ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட பகத்சிங்கும், இந்திய சுதந்திரத்திற்காக முன்நின்று உழைத்த ஜவகர்லால் நேருவும் பல்லாண்டு காலம் சிறையும், சித்திரவதையும் அனுபவித்தவர்கள் என்பதே சரித்திரம் கூறும் உண்மைகளாகும்

சிறைச்சாலைகள் நாய்களுக்காக கட்டப்படவில்லை, சிறைக்குள் இருக்கும் அத்தனை பேரும் குற்றவாளிகள் என்றோ, சிறக்கு வெளியே உலாவும் அத்தனை பேரும் உத்தமர்கள் தான் என்றோ கூறிவிடமுடியாது.
மாறாக விடுதலை வீரர்களையும், மகாத்மா காந்தி போன்ற உத்தமர்களையும், எத்தனையோ தியாகச் செம்மல் களையும் உருவாக்கியது சிறைகூடங்களே.!

எமது தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களின் விடுதலைக்காகக் கையேந்தி கண்ணீர் மல்கப் பிரார்த்தித்து நிற்கும் அனைத்து ஆதரவாளர்களினதும் தொண்டர்களினதும் தொடர் பிராத்தனைகளை எல்லாம் வல்ல இறைவன் அங்கிகரிப்பானாக….!

ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.
அதுபோல உண்மைத் தலைவன் நீதியில் கொண்ட நம்பிக்கையும், இறை பக்தியும் தர்மத்தின் சக்தியும், குற்றமற்ற அந்த த் தலைவனை சிறைவாசத்தைவிட்டும் மீட்டெடுக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
தானத் தலைவன் தூராத்தே சிறையில் இருந்தாலும் கட்சி உறுதியாகவும், அமோக ஆதரவை பெற்றதாகவும் நம்பிக்கையுடன் பயனித்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் கூறி வைக்க விரும்புகின்றோம்.
அறமும் நீதியும் வென்றே தீரும்.

சத்தியம் தோற்றுப்போன வரலாறு எங்குமேயில்லை.

எஸ். சுவைதீன்,
செயலாளர் நாயகம்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,

Web Design by Srilanka Muslims Web Team