கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் - Sri Lanka Muslim

கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்

Contributors

-பழுலுல்லாஹ் பர்ஹான்

 

கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகம் (Girne American University) இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் மெற்றொபொலிடென் கல்லூரியுடன் ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டது.

 

கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெற்றொபொலிடென் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஒரு வார கால துருக்கி நாட்டிற்கான விஜயத்தின்போது மேற்படி ஒப்பந்தம் கேன் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சேர்ஹாட் அக்பினர் மற்றும் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் ஒப்பமிட்டு கைச்சாத்திட்டனர்.

 

கேன்  அமெரிக்கன் பல்கலைக்கழகமானது லன்டன், அமெரிக்கா, துருக்கி, சிங்கப்பூர், ஹெங்கொங் போன்ற நாடுகிளில் காணப்படுகிறது. தற்போது மேற்படி ஒப்பந்தத்தின் மூலம் குறித்த பல்கலைக்கழகத்தின் செயற்பாடு இலங்கையில் மெற்றோபொலிடென் கல்லூரியினால் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு வெளிநாட்டில் தனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்ய விரும்பும் மாணவர்கள் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு கற்கை நெறிக்காக குறித்த பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஏதேனும் ஒரு நாட்டிற்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

 

04

 

05

 

06

 

07

 

08

 

09

Web Design by Srilanka Muslims Web Team