கேள்விக்கு முடிவின்றி நிறைவடையும் உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரனை ஆணைக்குழு..! » Sri Lanka Muslim

கேள்விக்கு முடிவின்றி நிறைவடையும் உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரனை ஆணைக்குழு..!

Contributors
author image

Editorial Team

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் இன்று (27) உத்தியோகபூர்வமாக நிறைவடையவுள்ளது.

இன்று இடம்பெறும் இறுதி அமர்வுக்குப் பிறகு உத்தியோகபூர்வமாக நிறைவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு திணைக்கத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு வந்தது.

அதனடிப்படையில் ஒரு வருடகாலத்திற்கும் அதிகமாக 440 பேரிடம் சாட்சி விசாரணைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team