கோடலியினை எடுக்க சென்ற குடும்பஸ்தர் மின்னல் தாக்குதலில் படுகாயம்! - Sri Lanka Muslim

கோடலியினை எடுக்க சென்ற குடும்பஸ்தர் மின்னல் தாக்குதலில் படுகாயம்!

Contributors

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வேணாவில் 01 ஆம் வட்டரா கிராமத்தில் இன்று மாலை வேளை இடியுடன் மழை பெய்து கொண்டிருந்த போது முற்றத்தில் உள்ள கோடாலியினை எடுக்க சென்ற குடும்பஸ்தர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

வேணாவில் கிராமத்தினை சேர்ந்த 28 அகவையுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தரே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..

மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டு முற்றத்தில் காணப்பட்ட கோடலியினை பாதுகாப்பாக எடுத்து வைப்பதற்காக குடைபிடித்துக்கொண்டு சென்றுள்ளார்.

மின்னல் முற்றத்தில் நின்ற வேப்பமரத்தில் தாக்கியுள்ளது. இதன்போது குறித்த குடும்பஸ்தரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பிடித்து சென்ற குடையின் மீதும் மின்னல் தாக்கியுள்ளது.

காயமடைந்தவர் வயிற்றிலும், காலிலும் எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் அயலவர்களின் உதவியுடன் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

Web Design by Srilanka Muslims Web Team