கொட்டும் மழையிலும் கோவில்மோட்டை விவசாயிகள் கொழும்பில் போராட்டம்..! - Sri Lanka Muslim

கொட்டும் மழையிலும் கோவில்மோட்டை விவசாயிகள் கொழும்பில் போராட்டம்..!

Contributors

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கோவில் மோட்டை விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்ப்பட்ட கோயில் மோட்டை விவசாயிகளால் நேற்றைய தினம் மாலை கொட்டும் மழைக்கும் மத்தியில் சுமார் ஒரு மணிநேரம் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அரசாங்க அதிபர், பிரதேச செயலர் ஆகியோர் கொரோனா என்று ஓடி ஒழியாமல் ஏழை விவாசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வை கொடு, ஆளுநரிடம் காணி பெறுவதற்கான அனுமதியை கோராமல், காணி தங்களுடையது என கூறும் அராஜகத்தை மத குருக்கள் நிறுத்துங்கள். போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோவில் மோட்டை விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

போராட்ட களத்திற்கு சென்ற ஜனாதிபதியின் செயலாளரிடம், சட்டத்தின்பால் வடக்கு மாகாண சபை எடுத்த முடிவை நடைமுறைப்படுத்த மத்தியரசு இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கலாக எழுத்தப்பட்டிருந்த மகஜர் ஒன்றை ஜனாதிபதியின் செயலாளரிடம் விவசாயிகள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team