கொம்பனித்தெரு மஸ்ஜிதுல் ஜாமியா வீதியில் செயற்பட்டு வந்த சூதாட்ட நிலையம் முற்றுகை - Sri Lanka Muslim

கொம்பனித்தெரு மஸ்ஜிதுல் ஜாமியா வீதியில் செயற்பட்டு வந்த சூதாட்ட நிலையம் முற்றுகை

Contributors

கொழும்பு, கொம்பனித்தெருவில் இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் மஸ்ஜிதுல் ஜாமியா வீதி கொழும்பு 2 எனும் முகவரியில் அமைந்துள்ள சூதாட்ட நிலையம் நேற்று இரவு 10.40 மணியளவில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அந்நிலையத்தின் உரிமையாளர் உட்பட சூது விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 11 பேர் கைது செய்யப்படடுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் டிசம்பர் 2ம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென்ற பணிப்புடன் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team