கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்..! » Sri Lanka Muslim

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்..!

Contributors
author image

Editorial Team

மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரிக்க வேண்டும் என இலங்கை அரசு அறிவித்து அதன்படி முயற்சிகளை செய்து வருகிறது.

உலகம் எங்கும் இத்தகைய உடல்களை 10 அடிக்கும் ஆழமான குழிகளில் புதைக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியுள்ளது.

இந்நிலையில் இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் கொண்ட முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர மக்களின் கலாச்சாரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் இலங்கை இனவாத அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பது அங்கே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

வேண்டுமென்றே சர்வதேச விதிகளுக்கு புறம்பாக இலங்கை இனவாத அரசு இத்தகைய நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக, மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதனால் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது நோய் தொற்றை அதிகரிக்க செய்யும் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

கொரோனா நெருக்கடியிலும் தங்களின் இனவாத அராஜகங்களை, இலங்கை அரசு முன்னெடுப்பதாக அங்கே மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கை அரசு அங்கு வாழும் அனைத்து சமூகத்தின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்குமாறும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க வேண்டும் என விரும்பும் முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர மக்களின் உணர்வுகளுக்கும், கோரிக்கைகளுக்கும் மதிப்பளிக்குமாறும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

06.11.2020

Web Design by Srilanka Muslims Web Team