கொரோனாவால் மரணித்த மனிதம்..! - Sri Lanka Muslim
Contributors

கொரோனா மனிதனை மட்டுமல்ல மனிநேயத்தையும் கொன்று விட்டது…

மினுவாங்கொடையில்
கொரோனா தொற்றுக்குள்ளான தனது தாயாரை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு பின்னர் பொறுப்பேற்க தனது மகள் மறுத்ததையடுத்து, தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கதறிய தாய்….

” தங்க மகளே என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” தாயின் கதறல்…

இப்படித்தான்.
கடந்த வாரத்தில் பண்டாரவளையில் இருவர் மயங்கி விழுத போது அவர்களை யாரும் துக்கி உதவிடவில்லை அந்தளவிற்கு மனிதம் மரணித்தது.

இன்று பெற்ற தாயை ஏற்க முடியாது என மகள் ஒதுக்குகிறாள்.. அப்படி என்ன உங்களுக்கு பயம்… போகும் உயிரை தடுத்து நிறுத்த உங்களால் முடியாது… எப்போது விதி முடிகிறதோ அப்போது நாம் போய் சேரத்தான் வேண்டும்… இப்படி மனிதனுக்கு அல்ல பெற்ற தாயிக்கு உதவிட முடியாத உயிர் இருந்தால் என்ன? போனால் என்ன?
தயவு செய்து கொரோனாவை காரணம் காட்டி இப்படி மனித நேயமின்றி நடந்திடதாதீர்கள்.. நாளை நீங்களும் இப்படி ஒதுக்கப்படலாம்… உயிருக்கு பயந்து மனிதநேயத்தை மறக்காதீர்கள்.. உதவிட முடியாவிட்டால் உதவ முடிந்தவருக்கு தொடர்பு கொண்டு உதவுங்கள்.. நாளை கடவுள் இதற்காக சரி உங்கள் ஆயுளை கூட்டலாம்…..

  • – யோ. தர்மராஜ்-

Web Design by Srilanka Muslims Web Team