கொரோனாவால் 113 ஆண்கள் உட்பட மேலும் 202 பேர் மரணம்..! - Sri Lanka Muslim

கொரோனாவால் 113 ஆண்கள் உட்பட மேலும் 202 பேர் மரணம்..!

Contributors

நாட்டில் மேலும் 202 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் மரணமடைந்தனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதையடுத்து நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் உயிரிழந்தவர்களில் 89 பெண்களும், 113 ஆண்களும் உள்ளடங்கு கின்றனர்.

இதில் ஆண்கள் இருவரும், பெண்கள் மூவரும் என 05 பேர் 30 வயதுக்குட்பட்டவர்களாவர். 24 ஆண்கள், 18 பெண்கள் என 42 பேர் 30 – 59 வயதுக்கு இடைப் பட்டவர்களாவர். 155 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 87 ஆண்களும், 68 பெண்களும் அடங்குகின்ற னர்.

Web Design by Srilanka Muslims Web Team