கொரோனாவினால் நாட்டில் பெண்களின் இறப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு..! - Sri Lanka Muslim

கொரோனாவினால் நாட்டில் பெண்களின் இறப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு..!

Contributors

தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனாவின் மூன்றாவது அலையால் இலங்கையில் பெண்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் இதை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனாவின் முதல் அலையால் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். எனினும் தற்போது பெண்களிடையே இறப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்று கூறியுள்ளார்.

மேலும், கோவிட் தொற்றுநோயால் இறக்கும் பல பெண்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது, இதய நோய் போன்ற தொற்றுநோயற்ற நோய்களும் உள்ளன.

சில நேரங்களில் ஆரோக்கியமாக இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team