கொரோனாவின் தாக்கம் உச்சகட்டமடைந்துள்ளது - நாடுபூராக ரோந்துப் பணியில் இராணுவத்தினர்..! - Sri Lanka Muslim

கொரோனாவின் தாக்கம் உச்சகட்டமடைந்துள்ளது – நாடுபூராக ரோந்துப் பணியில் இராணுவத்தினர்..!

Contributors
author image

Editorial Team

நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவது இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

பகல், இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களை மறித்து சோதனை செய்து பாதுகாப்பினை குறித்து உறுதிப்படுத்தும் செயற்பாட்னை முன்னெடுத்து வருகின்றனர்.

கொரோனாவின் 3 ஆவது அனர்த்தத்தின் பின்னர் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கஞ்சா கடத்தல்கள், அனுமதி பத்திரமின்றி மணல் அகழ்வு போன்ற சம்பவங்களை முறியடிப்பதற்காக இவ்ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தவிர கொரோனா சுகாதார நடைமுறைகளை கண்கானித்தல், முகக்கவசம் அணியாதோரை வழிப்படுத்தல், உள்ளிட்ட பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தும் வகையில் இராணுவத்தினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

இம் மோட்டார் சைக்கிள் படையணியானது அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team