கொரோனா உடல்களை அடக்கும் முறை வெளியீடு - 2 பேருக்கே அனுமதி, தற்காலிக இடமாகவே இரணைதீவு தெரிவு..! - Sri Lanka Muslim

கொரோனா உடல்களை அடக்கும் முறை வெளியீடு – 2 பேருக்கே அனுமதி, தற்காலிக இடமாகவே இரணைதீவு தெரிவு..!

Contributors
author image

Editorial Team

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தற்காலிக இடமாகவே இரணைதீவு தெரிவு செய்யப்பட்டது என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளின் பொதுச்செயலாளர்கள் மாகாணமாவட்ட சுகாதார பணிபபாளர்கள் உரிய அதிகாரிகள் அடங்கிய குழு குறிப்பிட்ட மாகாணங்களில் உடல்களை அடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடத்தை தெரிவு செய்யும்வரை தற்காலிகமாக உடல்களை அடக்கம் செய்வதற்காகவே இரணைதீவு தெரிவு செய்யப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

உரிய இடங்கள் குறித்து எனக்கு அறிவிக்கப்படும் என சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும்வரை இரணைதீவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. என குறிப்பிட்டுள்ள அவர் உடல்களை புதைப்பதற்கான நடவடிக்கைகளிற்கான செலவினை அரசாங்கமே பொறுப்பேற்கும்,உடல்கள் கொழும்பு மற்றும் வெலிகந்தை வைத்தியசாலைகளில் இருந்து எடுத்துச்செல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு இரண்டு உறவினர்களிற்கு அனுமதி வழங்கப்படும்,பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்மருத்துவ சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இறுதிகிரியைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team