கொரோனா ஒரு கொடிய நோய் அல்ல; சவால் விடுகிறார் எஸ்.பி..! - Sri Lanka Muslim

கொரோனா ஒரு கொடிய நோய் அல்ல; சவால் விடுகிறார் எஸ்.பி..!

Contributors

கொவிட் தொற்று நோய் பயப்பட வேண்டிய ஒரு கொடிய நோய் அல்ல என மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மரணத்தின் பயமே மரணத்துக்கு முக்கிய காரணம் என இன்று (26) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“இன்று இலங்கையின் இறப்பு வீதம் 1.9 ஆகும். மக்களின் மனதில் மரண பயத்தை உருவாக்குவது நல்லதல்ல. மரண பயமே இறப்புக்கு ஒரு முக்கிய காரணம். 81 சதவீத மக்கள் குணமடைந்து வீட்டுக்குச் செல்கின்றனர். 14 வீதமானோர் லேசான காய்ச்சலுடன் குணமடைகிறார்கள். எனவே பயப்படுவதற்கு இது ஒரு கொடிய நோய் அல்ல. சிலருக்கு தாங்கள் நன்றாகத் தேறி வருகிறோம் என்று கூடத் தெரியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team