கொரோனா காரணமாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு..! - Sri Lanka Muslim

கொரோனா காரணமாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு..!

Contributors

உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மூன்று நாட்களுக்கு மூடிவிட மாவட்ட கொரோனா வைரசு பரவலை தடுக்கும் வழிநடத்தல் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இங்கு கொரோனா வைரசு தொற்றுக்குள்ளானவர்கள் 42 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்..

பொருளாதார மத்திய நிலையத்தில் தொற்று நீக்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தகர்களின் பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து மூன்று நாட்களில் பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் திறக்கப்படும்.

Web Design by Srilanka Muslims Web Team