கொரோனா காலத்திலும் டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க களச் செயற்பாடும் புகை விசிறல் நடவடிக்கையும்..! - Sri Lanka Muslim

கொரோனா காலத்திலும் டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க களச் செயற்பாடும் புகை விசிறல் நடவடிக்கையும்..!

Contributors

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம்.பைசல் தலைமையில் டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க களச் செயற்பாடுகளும் புகை விசிறல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்மைக்காலமாக டெங்கு நுளம்பின் ஆதிக்கம் சமிக்கை காட்டி வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கும் வகையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களால் நாளாந்தம் களச் செயற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஒரு டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டதுடன் அதனை அண்டிய பகுதியில் புகை விசிறல்(Fogging) நடவடிக்கையும் நேற்று மேற்கொள்ளப்பட்டது. “கொவிட்-19 யின் தாக்கம் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலப்பகுதியில் ஆட்கொள்ளியான டெங்கு நோயும் ஊடுருவி நம்மை வந்தடைவதை மறந்து விடாதீர்கள்” ஆகவே சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team