கொரோனா ஜனாஷாக்களை இறக்காமத்தில் நல்லடக்கம் செய்ய மக்கள் பூரண ஆதரவு - உப தவிசாளர் நௌபர் மௌலவி..! - Sri Lanka Muslim

கொரோனா ஜனாஷாக்களை இறக்காமத்தில் நல்லடக்கம் செய்ய மக்கள் பூரண ஆதரவு – உப தவிசாளர் நௌபர் மௌலவி..!

Contributors
author image

Editorial Team

ஒருவருட காலமாக கொரோனா தொற்றால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கபட்டிருந்த நிலையில் கடந்த 24/02/2021 வெளியிடப்பட் அரச வர்த்தமானியினால் அடக்கம் செய்வதற்கான அனுமதி வளங்கப்பட்டது.
கௌரவ பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் பணிப்பின் அடிப்படையில், சென்ற வருடம் (2020) டிசம்பர் மாதம் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்களால் குறிப்பிட்ட ஆளத்தில் நீர் ஊற்று ஏற்பட சாத்தியமற்ற பிரதேசமாக இறக்காமம் பிரதேசம் அடயாள படுத்தப்பட்டிருந்த்து.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று இரவு இஷா தொழகையின் பின்னர் இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில், அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர் அல்ஹாஜ் ஏ.கே.ற ஊப் (மொலவி) அவர்களின் தலைமயில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம். எஸ் ஜெமீல் காரியப்பர், உப தவிசாளர் ஏ.எல். நொபர் (மௌலவி), கௌரவ உறுப்பினர் என். எம் ஆஷிக் உட்பட, ஜம்யியதுல் உலமா சபை, அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர்கள், சமூக அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, கொரோனாவினால் மரணிக்கும் உடல்களை இறக்காமம் பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கான பூரண விருப்பத்தை ஏகமனதாக அனைவரும் வெளிப்படுத்தியதுடன், அதற்கு பொருத்தமான மையவாடியையும் அடயாளப்படுத்தினர்.
அதாவது இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவசலுக்கு சொந்தமான (மையவாடி) காணிகளில் ஒன்றை கொரோனாவால் மரணிக்கின்றவர்களின் உடல்களை மாத்திரம் நல்லடக்கம் செய்வதற்கு வழங்க ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் உரிய அதிகாரிகளுக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏ.எல். நௌபர் (மௌலவி)
உப-தவிசாளர்,
இறக்காமம் பிரதேச சபை,

Web Design by Srilanka Muslims Web Team