கொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு..! - Sri Lanka Muslim

கொரோனா தடுப்பூசி ஏற்றச்செல்லும், முஸ்லிம் பெண்களின் கட்டாயக் கவனத்திற்கு..!

Contributors

– Inamullah Masihudeen –

தற்போது நாடெங்கிலும் ஊர் ஊராக Covid-19 தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது, மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று காத்திருந்து இத்தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலைமையில் முஸ்லிம் பெண்மணிகளுக்கு இத்தடுப்பூசிகளை வழங்கும்போது போது அங்கு கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் ஒரு பெண்மணிக்காக நீண்ட நேரத்தினை செலவிடவேண்டிய இக்கட்டான நிலைமைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காரணம் எமது பெண்மணிகள் இலகுவாக  தடுப்பூசிகளை ஏற்றத்தக்கவாறான ஆடைகளை அணிந்து செல்லாமையே! இதனால் அவ்விடத்தில் எமது பெண்மணிகள் உட்பட பலரும் அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே தடுப்பூசி ஏற்றச் செல்லும் முஸ்லிம் பெண்மணிகள் இலகுவாக தடுப்பூசிகளை ஏற்றத்தக்கவாறான ஆடைகளை கட்டாயம் அணிந்து செல்லுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்!

நாம் அங்கு கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு உதவியாக இருப்போம், நமது சமுதாயம் குறைகாணப்படுவாதிலிருந்தும் தவிர்ந்துகொள்வோம்! 

Web Design by Srilanka Muslims Web Team