கொரோனா தொற்றுடன் O/L பரீட்சை எழுதும் 55 மாணவர்கள்..! - Sri Lanka Muslim

கொரோனா தொற்றுடன் O/L பரீட்சை எழுதும் 55 மாணவர்கள்..!

Contributors

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதுவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Web Design by Srilanka Muslims Web Team