கொரோனா தொற்று காரணமாக கல்முனை தனியார் வைத்தியசாலை பூட்டு..! - Sri Lanka Muslim

கொரோனா தொற்று காரணமாக கல்முனை தனியார் வைத்தியசாலை பூட்டு..!

Contributors

கல்முனையிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றும் 05 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவ்வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது.

கல்முனை காசிம் வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு பொதுச் சுகாதாரப் பரிசோதர்களினால் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது அங்கு 05 ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதையடுத்தே இவ்வைத்தியசாலையை இம்மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 14 நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறித்த ஊழியர்கள் இங்கேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

இவர்கள் ஐவரும் பெண் ஊழியர்கள் எனவும் பொத்துவில், காரைதீவு, பாண்டிருப்பு, நாவிதன்வெளி மற்றும் பழுகாமம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களது குடுமபத்தினர் மற்றும் இவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

– அஸ்லம் எஸ்.மௌலானா

Web Design by Srilanka Muslims Web Team