கொரோனா தொற்று வலுப்பெற்றுள்ளது; இரு முகக் கவசங்கள், Face Shield அணியுங்கள் - சுதர்ஷினி..! - Sri Lanka Muslim

கொரோனா தொற்று வலுப்பெற்றுள்ளது; இரு முகக் கவசங்கள், Face Shield அணியுங்கள் – சுதர்ஷினி..!

Contributors

கொரோனா தொற்று வலுப்பெற்றுள்ளமையால் இரண்டு முகக் கவசங்கள், Face Shield அணிந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்று நோய் மற்றும் தொற்றுநோயியல் துறை இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று வலுப்பெற்றுள்ளமையால் முகக் கவசம் இரண்டை அணியுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வ தாகவும் வீட்டிலிருந்து வெளி யேறும் போது Face Shield அணிந்து செல்வது மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகுபாடு பார்க்காமல் அருகிலுள்ள கொரோனா மத்திய நிலையத்திற்குச் சென்று, விரைவில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொது மக்களைக் கேட்டுக்கொண்டார்.

மக்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாக்க தாங்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மற்றவர்கள் முடிவுகளை எடுக்கும் வரை காத்திருக்காமல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் முடிந்த வரை வீட்டில் அதிக நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம் என்றும், கொரோ னாவைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் மிகவும் முக்கியம் எனவும் அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team