‘கொரோனா’ பருவ கால நோயாக மாறலாம் - ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு - Sri Lanka Muslim

‘கொரோனா’ பருவ கால நோயாக மாறலாம் – ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு

Contributors

கொவிட்-19 (கொரோனா) பருவ கால நோய்த் தொற்றாக மறலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வானிலை, காற்றுத் தரம் ஆகியவை கொவிட்-19 வைரஸ் தொற்றைப் பாதிக்கும் சாத்தியம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

எனினும், வானிலை அம்சங்களின் அடிப்படையில் வைரஸ் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு எதிராக அது எச்சரித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பால் உருவாக்கப்பட்ட 16 பேர் கொண்ட குழு அந்த ஆய்வை நடத்தியது.

சுவாச நோய்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட பருவ காலத்தில் வரக்கூடியவை என்று அந்தக் குழு கூறியது.

அதனால், கொவிட்-19 நோய்த்தொற்று பல ஆண்டுகளுக்கு நீடித்தால், அதுவும் பருவ காலத் தொற்றாகலாம் என்று அது கூறியது. மாதிரி ஆய்வுகளும் அதையே குறிப்பிட்டதாகக் கூறப்பட்டது.

மேலும், கட்டாயமாக முகக்கவசம் அணிவது, பயணத் தடை ஆகிய அரசாங்கக் கட்டுப்பாடுகளே வைரஸ் பரவலில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்றும் வானிலையால் அல்ல என்றும் குழு குறிப்பிட்டது.

அதனால், வானிலை, பருவ நிலைச் சூழல் அடிப்படையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் எனக் குழு வலியுறுத்தியது.

Web Design by Srilanka Muslims Web Team