கொரோனா பெருந்தொற்று சிவப்புப் பட்டியல் 7 நாடுகளில் இலங்கையை இணைத்த பிரித்தானியா..! - Sri Lanka Muslim

கொரோனா பெருந்தொற்று சிவப்புப் பட்டியல் 7 நாடுகளில் இலங்கையை இணைத்த பிரித்தானியா..!

Contributors

கொரோனா பெருந்தொற்று ஆபத்து காணப்படும் சிவப்பு பட்டியலைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரையும், பிரித்தானிய அரசாங்கம் உள்ளடக்கியுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட்  –  டொபாகோ ஆகியவை அடங்குகின்றன.

சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணிக்க வேண்டுமாயின் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர் என்றாலும் கொவிட் பரிசோதனை நடாத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளிலிருந்து பயணிப்போர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானிய பிரஜைகளை பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team