கொரோனா பொசிட்டிவ் என்றதும், தொலைபேசியை துண்டிக்காதீர்கள் ..! - Sri Lanka Muslim

கொரோனா பொசிட்டிவ் என்றதும், தொலைபேசியை துண்டிக்காதீர்கள் ..!

Contributors

கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதை அறிந்தவுடன், சிலர் தமது அலைபேசிகளை நிறுத்திவிடுவதாகவும் சமூகத்தில் மேலும் தொற்றாளர்கள் அதிகரிப்பதற்கு இது ஒரு காரணியாக அமைவதாகவும், சுகாதார அமைச்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள தாமத நிலைக்கு, பொதுமக்கள் பொறுப்புணர்ந்துச் செயற்படாததே காரணம் என்றும் சாடினார்.

“நான் தொற்றாளராக இனங்காணப்பட்டால் எனது பிள்ளைகள், மனைவி, அயலவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு பிரதேசத்தில் 10 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், அவர்கள் அனைவரையும் மிக விரைவாக ஒன்றிணைத்து, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்தப் பொறுப்புணர்வு மக்களுக்கும் இருக்க வேண்டும். சிலர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதுடன், தங்களது அலைபேசிகளை நிறுத்தி விடுவிகின்றனர்.  80 சதவீதம் இவ்வாறு நடந்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

“தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்கள், நாம் தேடிச் செல்லும் இடங்களில் இருக்க வேண்டும் அல்லது பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

Web Design by Srilanka Muslims Web Team