கொரோனா வைரஸிலிருந்து விடுபட தடுப்பூசிகளை விட சுதேச வைத்திய முறையே சிறந்தது - நாலக தேரர்..! - Sri Lanka Muslim

கொரோனா வைரஸிலிருந்து விடுபட தடுப்பூசிகளை விட சுதேச வைத்திய முறையே சிறந்தது – நாலக தேரர்..!

Contributors

கொரோனா என்பது தடிமன் போன்ற ஒரு நோயாகும் என்றும் அதைக் குணப்படுத்த சுதேச மருந்து இருப்பதாக வெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இது மோசமடைந்தால், நிமோனியா நோயை ஏற்படுத்தும் என்றும் நிமோனியா நோயாளர்களுக்கு சிகிச்சைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸிலிருந்து விடுபடத் தடுப்பூசிகளை விட சுதேச வைத்திய முறையே சிறந்ததென இலங்கை சுதேச மருத்துவ சங்கத்தின் தலைவரான வெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

சரியான நடைமுறைகள் இல்லாமல் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு பக்க விளைவுகளை அனுபவிப்பவர்கள் சுதேச வைத்திய சிகிச்சையைப் பெறுமாறு அழைப்பு விடுப்பதாக காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team