கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்..? பிரிட்டன் உளவுத்துறை நம்பிக்கை..! - Sri Lanka Muslim

கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்..? பிரிட்டன் உளவுத்துறை நம்பிக்கை..!

Contributors

கொரோனா வைரஸ், சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

‘த சண்டே டைம்ஸ்’ இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து, முழுமையாக உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என பிரிட்டிஷ் அரசின் தடுப்பூசித் துறை அமைச்சர் நதீம் சகாவி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரசின் மூலாதாரம் குறித்து முதலில் இது போன்ற செய்திகள் வெளியானாலும், அதற்கு வாய்ப்பில்லை என பரவலாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அது குறித்து பல தரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகும் நிலையில், ஆய்வகத்துடன் நெருங்கிய தொடர்புடைய சில நபர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த சந்தேகம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team