கொலோசஸ் நிறுவனத்துக்கு உலோகம் விற்பனை செய்த குற்றச்சாட்டு; விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ரிஷாட் கோரிக்கை..! - Sri Lanka Muslim

கொலோசஸ் நிறுவனத்துக்கு உலோகம் விற்பனை செய்த குற்றச்சாட்டு; விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ரிஷாட் கோரிக்கை..!

Contributors
author image

ஊடகப்பிரிவு

கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (IDB), Colossus (Pvt) Ltd தனியார் நிறுவனத்திற்கு உலோகம் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டின் மீதுவிசாரணைகளை துரிதப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில்உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும்ஆகையால் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுஅக்குற்றச்சாட்டுக்கள் குறித்தான உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு ஆணைக்குழுவின் தலைவருக்குஎழுத்துமூலமான கோரிக்கை கடிதம் ஒன்றினை இன்று (08) நேரில் சென்று சமர்ப்பித்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிஷாட் எம்.பி கூறியதாவது,

“கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழிருந்தகைத்தொழில் அதிகார சபைவருடம் ஒன்றுக்கு சுமார் முன்னூறு நிறுவனங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை வழங்கி வருகின்றது. அந்தவகையில்ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டுக்கு சொந்தமான நிறுவனத்துக்கும் மூலப் பொருட்களை வழங்கியிருக்கின்றது. இந்த விற்பனைகைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட அதிகாரிகளின் மேற்பார்வையுடனேயே நடைபெறுவது வழமையானது. இவ்வாறான விடயங்களில்அமைச்சரான எனக்கு எந்தத் தொடர்புமில்லை. அத்துடன்இதில் நான் தலையீடு செய்வதும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில அரசியல்வாதிகள் என்னைக் குறிவைத்து கிளப்பிய புரளிகளில் இதுவும் ஒன்றாகும்” என அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team