கொளுத்துடா » Sri Lanka Muslim

கொளுத்துடா

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


எரிக்கின்ற மடையனே
எழு
உன் காரின் டேங்கை
உடனே பற்ற வை
அதனுள் இருப்பது
அராபியப் பெற்றோல்!

கடந்த மாதம் தாத்தி
கஷ்டப் பட்டனுப்பிய
கட்டார் றியாலை
கட்டோடு பற்றவை!

களுகங்கை திட்டம்
கடன் கொடுத்தது குவைத்
முழு ஆற்றையும் கொளுத்தி
முட்டாள் தனம் செய்

வெள்ளம் வந்தால்
வேறழிவு வந்தால்
அள்ளிக் கொண்டுவரும்
அராபியக் கப்பலை
அப்படியே கொளுத்து

காபட் ரோட்டை
கண்டபடி கொத்தி
இலங்கைப் பெற்றோலால்
எரித்து அழி.
அராபியத் ‘தார்’
அழிவது பெருமை

இவற்றைக் கொளுத்தினால்
இலங்கைக்கே நஷ்டம்
என்று நினைக்கும்
ஏ..மூடனே

கடையைக் கொளுத்தினால்
கனடாவுக்கா நஷ்டம்?
இலங்கைக்குள் எரிந்தால்
எமக்குத்தான் நஷ்டம்
என்பதைப் புரிய
இயலாது உன்னால்.

ஏனென்றால்
‘ஞான’ப்பால் என நினைத்து
சாணிப்பால் குடித்த
கேணயன் நீ….!

Web Design by The Design Lanka