கொள்கலனில் ஹெரோயின் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பாகிஸ்தானில் கைது - Sri Lanka Muslim

கொள்கலனில் ஹெரோயின் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பாகிஸ்தானில் கைது

Contributors

கொள்கலனில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் 269 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கொள்கலன்களின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தான் பிரஜை ஒருவரும், முஸ்லிம் வர்த்தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களுக்கு மேலதிமாக இந்த கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மொஹமட் சர்தார் என்பவரை பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினர் அண்மையில் கைது செய்துள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருள் இலங்கை சுங்க அதிகாரிகளினால் மீட்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே சர்தார் இலங்கையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

இவர் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான தாவுத் இப்ராஹீமின் நெருங்கிய சகா எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து விசாரணை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.tc

Web Design by Srilanka Muslims Web Team