கொள்ளையில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை - Sri Lanka Muslim

கொள்ளையில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை

Contributors

இரத்தினக்கல், தங்க நகைகள் உள்ளிட்ட 18 இலட்சத்து இருபத்தையாயிரத்து ஐநூறு ரூபா கொள்ளை குறித்து கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் உட்பட மூவர், தலா இரண்டரை இலட்சம் ரூபா பத்திரப் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டனர்.

படல்கும்பர பகுதியின் கரவில என்ற பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி, மேற்படி கொள்ளை இடம்பெற்றிருந்தது.

இதன்போது குறித்த மூவரும் வீடு ஒன்றுக்குள் புகுந்து, வீட்டு உரிமையாளர் உள்ளிட்ட சிலரை, மரண அச்சுறுத்தல் செய்து, துப்பாக்கி முனையில், மேற்படி கொள்ளையை மேற்கொண்டிருந்தனர்.

இது குறித்த வழக்கில் மேற்குறித்த மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

1-3-2021 அன்று மேற்படி வழக்கு மொனராகலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சலினி அமரவிக்ரம முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களுக்கு பிணை கோரி, சட்டத்தரணிகள் ஊடாக மனுவொன்று நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, தலா இரண்டரை இலட்ச ரூபாவிற்கான பத்திரப்பினைகளை வைத்து, பிணையில் செல்ல அனுமதித்த நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு மீண்டும் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படுமென்றும் நீதிபதி தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team