கொழும்பிற்கு கட்டார் விமான சேவை அதிகரிப்பு » Sri Lanka Muslim

கொழும்பிற்கு கட்டார் விமான சேவை அதிகரிப்பு

flight.jpg2

Contributors
author image

Editorial Team

கட்டாரின் டோஹா – கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையில் நான்காவது தினசரி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக கட்டார் எயார்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையிலிருந்து அதிகரித்து வரும் பயணக் கோரிக்கைகளுக்கு ஏற்ற வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய கூடுதலாக, நான்கு தினசரி விமானங்களில் கூடுதலாக இரண்டு விமானங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தெற்காசியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்றான கொழும்பில் எங்கள் சேவைகள் மற்றும் திறன்களை அதிகரிப்பதன் மூலம் மிதமான ஓய்வு பயணங்கள் மற்றும் வணிக பயண தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம் என கட்டார் எயார்வேஸ் தலைமை நிர்வாகி அக்பர் அல் பேக்கர் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka