கொழும்பில் ஒரு பிடிச்சோற்றுக்காக எத்தனை முஸ்லிம்கள் தாய்மார்கள் ஏங்கி நிற்கின்றனர் - Sri Lanka Muslim

கொழும்பில் ஒரு பிடிச்சோற்றுக்காக எத்தனை முஸ்லிம்கள் தாய்மார்கள் ஏங்கி நிற்கின்றனர்

Contributors

-அஸ்ரப் ஏ.சமத்-

ஆசியாவின் ஆச்சியரிமிக்க கொழும்பில்    அதிசயத்தக்க வகையில் வருமைக்கோட்டின் கீழ் 60 வீதமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். என்று தகவல்கள் குறிப்பிடுகிறது . கொழும்பில் வறுமைக் கோட்டில் வாழும் முஸ்லிம் சிறார்களை பராமரிக்க   நேற்று முன்தினம் (4) கொழும்பு தபால் நிலைய கூட்ட மண்பத்தில் கெயார்  ரஸ்ட் பவுண்டேசன் என்ற அமைப்பு ஒன்று அங்குராப்பணம் செய்து வைக்கபட்டது.

 

 

அதில் பிரதம அதிதியாக ரெயின்கோ நிறுவனத்தின் தலைவர் பௌஸ் ஹாஜியார் கலந்து கொண்டார். “கொழும்பில் உள்ள  முஸ்லிம்கள் வறுமைக் கோட்டின் கீழ் “ என்ற தலைப்பில் ஜாமியா நளிமியா பிரதிப் பணிப்பாளர்ஷ்ஷய்க்.A.C அகார் முஹம்மத் விரிவானதும்  உருக்கமானதும் ,நெஞ்சைத் தொடும் உரையொன்றை நிகழ்ததினார். இதில் மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை, கொலநாவை போன்ற பகுதிகளிலிருந்து அழைக்கப்பட்ட  சிறு வர்த்தகத்தில்  ஈடுபடும் முஸ்லிம்கள், சட்டத்தரணிகள், பள்ளிவசால் நிர்வாகிகள் என சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

 

 

மாளிகாவத்தை, கொழும்பு பிரதேச மக்கள்   பின்தங்கிய இடங்களில்  வாழ்க்கை நடாத்துதல,; கணவனை இழந்த பெண்கள், போதைவஸ்த்து பாவணையால் பாதிக்கபட்ட குடும்பங்கள் ,;  பாதையோரங்களில் பிச்சை எடுக்கும் நபர்கள் , பள்ளிவாசலுக்கருகில் கை நீட்டுதல், பாடசாலை மாணவர்கள் தமது கல்வியைத் தொடர முடியாமல் உள்ள நிலை  தொடர்பில் சில மாணவர்களது நேர்முகம் போன்ற காட்சிகள் திரையிடப்பட்டு இங்கு காண்பிக்கப்பட்டது

 

அத்துடன் 10 அடி கொண்ட ஒரு அரையில் வாழ்ந்து வரும் தாய் தந்தை, வயதுவந்த  பெண்பிள்ளைகள், ஆண் பிள்ளைகள் என அவர்களது வாழ்க்கை முறைமையும் இங்கு காட்சியாக காண்பிக்கப்பட்டது. இதனை “நொலேஜ் பொக்ஸ் “ நிறுவனம் இந்த  வீடியோ காட்சியை ஆக்கியிருந்தது ..

 

இந்த காட்சிகளின் பின்னர் சுமார் 100 முஸ்லிம் பிள்ளைகளது கல்விக்கு  உதவுவதற்காக அங்கு வருககை தந்திருந்த சில வர்த்தகர்கள்  முன்வந்தனர்.

 

ஒரு பிள்ளைக்கு மாதம்  ஒன்றுக்கு 3ஆயிரம் ரூபா வீதம் 100 பிள்ளைகளுக்க கல்விக்காக உதவுவதற்காக  25 க்கும் மேற்பட்ட சிறுவர்த்தகர்கள்  முன்வந்தனர். அதற்காக தமது பெயர்களையும் கெயார் ரஸ்ட் பண்டிடம் பதிவு செய்து கொண்டனர்.

 

கொழும்பில் வறுமையில் முஸ்லிம் குடும்பங்கள் 

விதவைகள், மற்றும் கணவனால் விட்டுச் சென்ற பெண்கள்  தமது பிள்ளைகளைகளை பாடசாலைக்கு அனுப்பமுடியாமல்  கொழும்பு வீதிகளில் நடையோர வியாபாரத்திற்கும் கூலித் தொழில்களுக்கும் அனுப்பி  கிடைக்கும் ஊதியத்தில் தமது  வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர்.

 

கொழும்பில் மாளிகாவத்தை சிலேவ் ஜலண்ட் தெமட்டக்கொட, புதுக்கடை, கிராண்பாஸ் போன்ற பகுதிகளில் 100-400 சதுர அடி அளவு கொண்ட வீடுகளில் வாழும் குடும்பங்களது கஷ்டங்களை   கொழும்பில் உள்ள வர்த்தக சமுகம் கண்டுகொள்ளவில்லை என்று குற்றசாட்டு உண்டு .

 

 

தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அல்லது மத்ரஸாவுக்கு அனுப்பி சிறந்த கல்வியைக்பெற்றுக்கொள்ள  முடியாத  சமூகம்  ஒரு வண்முறைமிக்க பயங்கர சமூகமாக மாறுவது இயல்பாக எங்கும் இடம்பெறுகிறது .

 

அமைதியற்ற சமூகத்துக்கு முதற் காரணம் வறுமை.  எங்கு வறுமை இருக்கின்றதோ அங்கு வன்முறை இயற்கையாகவே இருக்கும். ஒரு குடும்பத்தின் தலைவன்   சிறையில் போதைவஸ்த்து அல்லது வேறு சட்டவிரோத கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு 5-25 ஆண்டுகள்  சிறையில் இருப்போரின் குடும்ப நிலைகள் என்ன ?

 

கொழும்பில் வர்த்தகம் முஸ்லிம்களின் கைகளில் உள்ளது எனச் சொல்லி வந்தனர் ஆனால் தற்போழுது 5-6 வீதமானோரே வர்த்தகத்தில் ஓரளவு உள்ளனர்.

 

புதுக்கடையில் உள்ள வீதியில் அல்லது மாளிகாவத்தையில் உள்ள வீதியில் பெட்டிக்கடைகளை வைத்துக்கொண்டிருந்தாலும் அதுவும் வர்த்தக சமூகம் எனச் சொல்கின்றனர்.

 

மறுபுறத்தில்  கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளில்   கல்வியல் நிறுவணங்கள் நூற்றுக்கணக்கில் பெருகி வருகின்றன, ஆனால் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் சோற்றுக் கடைகள்தான் பெருகியுள்ளது.

 

கொழும்பில் சில அடர்த்தியாகவும் தொடர்மாடி வீடுகளில் வாழும் சமுகம் மிகவும் வன்முறைக்கு உட்பட்ட சமுகமாக மாறிவருகின்றது. மூவினங்களும் கலவனாக  தொடர்மாடி வீடுகளில் வாழ்ந்து வரும் சமூகம் ஒழுக்கமின்மை, கல்வியறிவில் நாட்டமின்மை, மார்க்கமின்மை அமைதியின்மை ஆகியன பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன் அவை   கல்வி கற்கக் கூடிய சூழலற்ற குடியிருப்புக்களாக காணப்படுகின்றன.

 

கடந்த வாரம் கொழும்பு 7 தெவட்டஹா பள்ளிவாசலில் நடைபெற்ற கெடியேற்ற வைபவத்தில் சொப்பிங்வேக்கில் ஒரு பிடி கந்தூரியைப் பெற்றுக்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கூடியிருந்தனர்  . இது ஒரு பிடிச்சோற்றுக்காக எத்தனை தாய்மார்கள் ஏங்கி நிற்கின்றனர். எனக் காணக்கூடியதாக உள்ளது. (வசதி படைத்தவர்கள் சோற்றுக்கு கியூவில் நிற்பதில்லை என்பது கவனிக்கப் படவேண்டும் )

 

132456

Web Design by Srilanka Muslims Web Team