கொழும்பில் பெண்ணொருவரின் சடலத்தை வீசிச் சென்ற நபர் தொடர்பான உண்மைகள்!! - Sri Lanka Muslim

கொழும்பில் பெண்ணொருவரின் சடலத்தை வீசிச் சென்ற நபர் தொடர்பான உண்மைகள்!!

Contributors

கொழும்பு , டாம் வீதியில் சூட்கேஸில் பெண்ணொருவரின் சடலத்தை
வைத்து தப்பிச் சென்ற நபர் புத்தல பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரென கண்டறியப்பட்டுள்ளது.


52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் , தனது படல்கும்புற வீட்டில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.

குருவிட்ட தெப்பாகம பகுதி யுவதி ஒருவருடன் காதல் தொடர்பு இவருக்கு இருந்ததாகவும் , நேற்றுமுன்தினம் ஹங்வெல்ல பகுதி ஹோட்டலுக்கு இந்த யுவதியை அழைத்த இவர் அங்கு யுவதியை படுகொலை செய்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யுவதியின் தலையை வீசிவிட்டு உடலை மட்டும் கொழும்புக்கு எடுத்துவந்த இந்த நபர் , தஙகியிருந்த ஹோட்டலின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விடயத்தை வெளியில் கூறினால் கொலை செய்வதாக எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும் தலைமறைவான இவரை தேடி விசேட பொலிஸ் குழுக்கள் விரைந்துள்ளன.

தாம் பெரிய தவறொன்றை செய்துவிட்டதாகவும் பொலிஸ் தன்னை நெருங்கினால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறி இவர் எழுதிய கடிதமொன்றும் அவரது வீட்டில் இருந்து சிக்கியுள்ளது.

பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

Siva Ramasamy

Web Design by Srilanka Muslims Web Team