கொழும்பில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கவில்லை!- லக்ஸ்மன் ஹுலுகல்ல - Sri Lanka Muslim

கொழும்பில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கவில்லை!- லக்ஸ்மன் ஹுலுகல்ல

Contributors

கொழும்பில் போராட்டங்களை நடாத்த தடை விதிக்கப்படவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் போராட்டங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ நடத்தக் கூடாது என பாதுகாப்பு அமைச்சோ அல்லது சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சோ உத்தரவிடவில்லை. பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலேயே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது. பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு சில ஆண்டுகளில் இந்த மாநாட்டை நடாத்த கிட்டியமை மகிழ்ச்சி அளிக்கின்றது. மாநாடும் அது தொடர்பான நிகழ்வுகளும் ஒரு சில நகரங்களிலேயே நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team