கொழும்பில் மீண்டும் குண்டுத் தாக்குதல் அச்சம் - பரபரப்பை ஏற்படுத்திய கடற்படை..! - Sri Lanka Muslim

கொழும்பில் மீண்டும் குண்டுத் தாக்குதல் அச்சம் – பரபரப்பை ஏற்படுத்திய கடற்படை..!

Contributors

கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல – போப்பிட்டிய – தூய நிகொலா தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் கூறிய விடயம் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குண்டு வெடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளமையினால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கடற்படை அதிகாரிகள் சிலரால் தேவாலயத்திற்கு நேரில் சென்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தேவாலயத்தின் போதகர் ஜயந்த நிமல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team