கொழும்பில் வேகமாக பரவும் கொரோனா தொற்று புதியவகையா..? - Sri Lanka Muslim

கொழும்பில் வேகமாக பரவும் கொரோனா தொற்று புதியவகையா..?

Contributors

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அதிகமாக பரவிவரும் கொரோனா தொற்று எந்த வகையை சேர்ந்தது அல்லது புதிய வகையா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டில் நேற்றையதினம் 2646 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் 36 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாவர். அதிகளவில் கம்பகா, இரத்தினபுரி மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே தொற்றாளர்கள் இனம்காணப்பட்டிருந்தனர்.

இதன்படி கம்பகாவில் 444 பேரும், இரத்தினபுரியில் 392 பேரும் கொழும்பில் 414 பேரும் இனம் காணப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தொடரச்சியாக தொற்றாளர்கள் இந்த மாவட்டங்களில் இருந்து இனம் காணப்படுவதானது எந்தவகையான தொற்று என்பது குறித்தே ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் இந்த பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய ஆய்வுகளில் இலங்கையில் பரவிவரும் தொற்று இங்கிலாந்து வகையை சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Web Design by Srilanka Muslims Web Team