கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம், ஒன்றினையவுள்ள இரண்டு பிரபலங்கள்..! - Sri Lanka Muslim

கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம், ஒன்றினையவுள்ள இரண்டு பிரபலங்கள்..!

Contributors
author image

Editorial Team

நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்க உதவிசெய்த சிவில் அமைப்புக்கள் அமைச்சர் விமல் வீரவன்சவையும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவையும் இணைத்து புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள முன்னணி பௌத்த தேரர்கள் இணைந்து இதற்கான பேச்சுக்களை இருவரிடத்திலும் நடத்தியிருப்பதாகவும், அதற்கான ஆலோசனைகளை வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த இருவரும் நேருக்குநேர் இதுவரை பேச்சு நடத்தவில்லை என்றாலும், அதற்கான முதற்கட்ட நடவடிக்கையை எடுக்க தயாராகி வருவதாக மேலும் தெரியவருகின்றது.

அண்மைக்காலமாக அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தனித்து கூட்டங்களை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team