கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரதின நிகழ்வுகள் (புகைப்படம்) - Sri Lanka Muslim

கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரதின நிகழ்வுகள் (புகைப்படம்)

Contributors

-அஸ்ரப் ஏ சமத்-

கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 66வது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று 4ஆம் திகதி தெஹிவளை பாலத்தருகில் உள்ள மீலாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

 

 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ரத்மலானை பிரதேச செயலாளர் ஹேமசிறி பியதிலக்க தேசியக்கொடியையும் பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எம்.முஹம்மட் பாடசாலைக் கொடியை ஏற்றி வைத்தார்.

 

 

கொழும்பு ஊடகவியலாளர் சங்கத்தினால் 100க்கும் மேற்பட்ட நூல்களும் குர்ஆன் மொழிபெயர்ப்புப் 20 பிரதிகளும் சங்கத்தினால் தலைவர் எம்.ஐ.எம்.அஸ்லம் செயலாளர் அஸ்ரப் ஏ சமத், பத்திரிகையாசிரியர் எஸ் ஜாவீத் ஆகியோர்கள் இந் நூல்களை கல்லூரியின் நூலகத்திற்காக அதிபரிடம் கையளித்தனர்.

 

 

தெஹிவலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஜ குணரட்ன (ஜ.பி )கலந்து கொண்டார்.

 

 

பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்

 

j2 j3 j4 j5 j6

Web Design by Srilanka Muslims Web Team