கொழும்பு ஐ.நா அலுவலகத்திற்கு முன் கிழக்குமாகாண சிவில் பிரஜைகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் » Sri Lanka Muslim

கொழும்பு ஐ.நா அலுவலகத்திற்கு முன் கிழக்குமாகாண சிவில் பிரஜைகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

c8

Contributors

asraff samad

 

இன்று காலை கிழக்குமாகாண சிவில் பிரஜைகள் அமைப்பினர் அம்பாறை மாவட்டத்தில் இருந்து 3 பஸ்கள் மூலம் கொழும்பு வந்து தமிழ் மக்கள் இலங்கைக்கு எதிராக ஜெனிவா முன் வைக்கப்படுகின்ற பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள்.

 

 

அத்துடன் கொழும்பு நகரமண்டபத்தில் இருந்து நடைபவணியாக இம் மக்கள் ஜக்கிய நாடுகளின் இலங்கை அலுவலகத்திற்கு முன்பு சென்று தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து காலி வீதியாக நடைபவணியாக வந்து கொள்ளுப்பிட்டியில் உள்ள அமேரிக்கதூதுவர் ஆலயத்தைஅடைந்தனர். இப் பிரஜைகளின் ஏற்பாட்டாளர் சீலன் என்பவர் அமேரிக்க தூதுவர் ஆலயத்தின் அதிகாரி ஒருவரிடம் ஜெனிவா மனிதஉரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டுள்ள தீர்மாண்த்திற்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் கொண்டுவந்த அறிக்கையையும் கையளித்தார்.

 

 
இக் கூட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலிகளின் வைத்தியராக செயல்பட்ட ஒருவர் கருத்துதெரிவித்தார் – தமிழர்களாகிய நாங்கள் இலங்கையில் மிகவும்அமைதியாகவும்,சமாதாணமாகவும் வாழ்ந்துவருகின்றோம். கடந்தகாலத்தில் யுத்தத்தில் இங்குவாழும் மக்களே மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கினோம்.

 

 

வெளிநாடுகளில் மிகவும் சொகுசாகவாழும் புலம்பெயர்ந்ததமிழர்களே இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பலஅபிவிருத்தித் திட்டங்களை எமக்கு செய்து தருகின்றார். மிகவும் விரிவாக கொழும்பு வந்தோம். ஜனாதிபதியின் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும். நாங்கள் அவருக்கு சார்பாகவே இங்குவந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
திருக் கோவிலில் அகதியாக வாழ்ந்து வந்த வயோதிப பெண் ஒருவர் அங்கு ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு குரல் தருகையில் –

 
வயோதிப பெண் –எனக்கு வீடு இல்லை- நான் இப்ப திருக்கோவிலில் உள்ள கோவிலில் அகதியா வாழந்து வருகின்றேன். எனது வீட்டையும் எங்களையும் அம்பாறையில் இருந்து சிங்கள மக்கள் துறத்திவிட்டார்கள். அந்த இடத்தையும் அவர்கள் பிடித்துவிட்டார்கள். இன்றுகொழும்புக்குஅழைத்துவந்து ஜனாதிபதியிடம் வீட்டைக் கேள் என்றுதான் அழைத்து வந்தார்கள் என அப் பெண் தெரிவித்தார்.

 
ஊடகவியாளர்- நீ ஏன் ஜெனிவா பிரேரணைக்கு ஆர்ப்பாட்டம் நடக்குது அதற்குத்தானே வந்தீர்கள் எனகேட்டடர் ?

 
வயோதிப பெண் –இல்லை. கொழும்புக்கு வீடு ஒன்றை பெற்றுக்கொள்ள நீ அரசாங்கத்திடம் நேரடியாக பேசு என்று தான் அழைத்துவந்தார்கள் எனத் தெரிவித்தார்.

 

c1 c2 c3 c4 c5 c6 c7 c8 c9 c10 c11 c12 c13

Web Design by The Design Lanka