கொழும்பு சாஹிரா பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டில் இன்று ரகர் போட்டி - Sri Lanka Muslim

கொழும்பு சாஹிரா பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டில் இன்று ரகர் போட்டி

Contributors
author image

ருஸைக் பாரூக்

 சாஹிரா பழைய மாணவர் ரகர் சங்கம் ஒழுங்கு செய்துள்ள பாடசாலைக்கிடையிலான ரகர் போட்டி இன்று 20ம் திகதி காலை 8.00 மணி முதல் சாஹிர கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

 

10, 12 மற்றும் 14 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் ஆனந்தா கல்லூரி, டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, சாந்த ஜோஸப் கல்லூரி.

 

மஹாநாம கல்லூரி, நாலன்தா கல்லூரி, ரோயல் கல்லூரி (பாணந்துறை), சாந்த பீடர்ஸ் கல்லூரி, சீ.டப்லிவ்.டப்லிவ்.கன்னங்கரா கல்லூரி, வெஸ்லி கல்லூரி, சாஹிரா கல்லூர், தேர்ஸ்டன் கல்லூரி, சாந்த பெனடிக்ட் கல்லூரி மற்றும் பிரன்ஸ் ஓப் வேல்ஸ் கல்லூரி ஆகிய கல்லூரிகள் பங்கேற்கின்றன.

 

இந் நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பெளசான் அன்வர் பிரதம அதிதியாகவும் ஸ்ரீ லங்கா ரக்பி உதைப்பந்தாட்ட சங்க செயலாளர் நலின் டி. சில்வா கெளரவ அதிதியாக கலந்து கொள்வர்.

Web Design by Srilanka Muslims Web Team