கொழும்பு நோக்கிச் செல்லும் தனியார் பஸ்களில் இரவு நேரங்களில் காட்டப்படும் படங்களால் முகம் சுளிக்கும் பிரயாணிகள் - Sri Lanka Muslim

கொழும்பு நோக்கிச் செல்லும் தனியார் பஸ்களில் இரவு நேரங்களில் காட்டப்படும் படங்களால் முகம் சுளிக்கும் பிரயாணிகள்

Contributors

மக்கள் நண்பன்
-சம்மாந்துறை அன்சார்-
இன்று கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இருந்து தங்களது தேவைகளின் நிமிர்த்தம் கொழும்புக்குச் செல்வதற்கு பொதுமக்கள் தனியார் பஸ்களின் பாவனையையே பயண்படுத்துகிறார்கள்.
தனியார் பஸ்களில் கொழும்புக்கு பயணம் செய்வதற்கு கட்டணம் அதிகம் என்றாலும் பெரும்பாலும் பொதுமக்கள் தனியார் பஸ்களின் மூலமே பிரயாணம் செய்ய விரும்புகிறார்கள் காரணம் தனியார் பஸ்களில் சிறந்த பயண வசதிகள் இருப்பதனால்.
தனியார் பஸ்களில் சிறந்த பயணவசதிகள் இருந்தாலும் பஸ்களில் இரவு நேரங்களில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களால் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆபாசமான திரைப்படங்களும், இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்வரிகளும் மற்றும் வெறுக்கத்தக்க விதத்தில் அமையப் பெற்ற ஆபாசக் காட்சிகளும் இடம் பெறும் திரைப்படங்களை தனியார் பஸ் நடத்துனர்கள் ஒளிபரப்புவதாகவும் அதன் மூலம் குடும்பத்தோடு தாய், தந்தை, மகள், மகன் என பிரயாணம் செய்வோர் அசௌகரியங்களுக்கு உட்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அந்தத் திரைப்படங்களில் இடம்பெறும் ஆக்ரோசமான சண்டைக்காட்சிகள், கடுமையான இசை மற்றும் இரைச்சல் போன்றனவற்றால் பிரயாணிகள் துாக்கம் தொலைப்பதாகவும் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
எவ்வளவு காசு கொடுத்தாவது நிம்மதியாக கொழும்புக்கு பயணம் செய்யலாம் என்று தனியார் பஸ்களை நம்பி வருவோர் இவ்வாறான சிரமங்களுக்கு முகம் கொடுத்து ஏமாந்து விடுவதாக தெரிவிக்கின்றார்கள்.
ஆகவே தனியார் பஸ் உரிமையாளர்களே…!!! மேற் கூறிய இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு உங்கள் பஸ்களில் பயணம் செய்யும் பிரயாணிகளின் பயணத்துக்கு அசௌகரியங்களை உண்டு பண்ணால் உங்களது பிரயாண ஒழுங்குகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
உங்களது பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள தொலைக்காட்சிகளை நல்ல பல, பயண்தரத்தக்க நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பயண்படுத்துங்கள்.

Web Design by Srilanka Muslims Web Team