கொழும்பு நோக்கி வரும் வாகனங்களுக்கு முக்கிய அறிவிப்பு! - Sri Lanka Muslim

கொழும்பு நோக்கி வரும் வாகனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Contributors

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் வெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொட்டிகாவத்தை சந்தி வரையான பகுதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இதற்கமைய, இன்று  (01) இரவு 10.00 மணி முதல் நாளை (02) மாலை 05.00 மணி வரை அந்தப் பகுதி மூடப்படும்.

வீதியைச் சுற்றி வசிப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த காலப்பகுதியில் கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் வெல்லம்பிட்டிய சந்தி கொலன்னாவ வழியாக கொட்டிகாவத்தை சந்தி கொத்தட்டுவ நகரத்திலிருந்து அவிசாவளை வீதிக்குத் திரும்ப முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவிசாவளையிலிருந்து வரும் வாகனங்கள் கொத்தட்டுவ நகரம், கொட்டிகாவத்தை சந்தி வழியாக கொழும்பு நோக்கிப் பயணிக்க முடியுமெனவும். கடுவல முதல் ஒறுகொடவத்தை வரையிலான நிலத்தடி நீர் குழாய் அமைப்பு தயாரிக்கும் பணியின் காரணமாக இந்த வீதி மூடப்படுவதாகவும்  பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team