கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தை: மொத்த வியாபாரிகளுக்காக மாத்திரம் இன்று முதல் திறப்பு..! - Sri Lanka Muslim

கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தை: மொத்த வியாபாரிகளுக்காக மாத்திரம் இன்று முதல் திறப்பு..!

Contributors

கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தை மொத்த வியாபாரிகளுக்காக மாத்திரம் இன்று முதல் திறக்கப்படுகிறது.

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள மொத்த சந்தையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யக்கூடியவகையில் அனைத்து மொத்த வர்த்தகர்களுக்கும் இன்று முதல் அனுமதி வழங்கப்படடுள்ளது.

சம்பந்தப்பட்ட பிதேச செயலகத்தில் தமக்கான அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுக்கொண்டு மொத்த வியாபாரிகள் கொழும்பு வர முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் புறக்கோட்டை மொத்த வியாபார சந்தை மத்திய நிலையத்தை, வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன பார்வையிட்ட போது இந்த விடயங்களை குறிப்பிட்டடார்..

இதன் போது வர்த்தக சங்க தலைவர் உட்பட ஏனைய பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது பொருட்களை கொள்வனவு செய்வோரும் அதனை வெளியில் எடுத்துச் செல்வோரும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது ஒரு கட்டாய தேவையாகும். என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரதேச செயலகத்தின் அனுமதிப் பத்திரம் இன்றி இந்தச் சந்தையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

இது விடயம் தொடர்பான அனுமதிப்பத்திரங்களை பரிசோதிப்பதற்கு பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team