கொழும்பு பெளஸிக்கு கல்குடாவில் பெளஸி மாவத்தை இருக்கும் போது ஏன்....? - Sri Lanka Muslim

கொழும்பு பெளஸிக்கு கல்குடாவில் பெளஸி மாவத்தை இருக்கும் போது ஏன்….?

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

கல்குடாவில் அழிக்கப்பட்டு வருகின்ற மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதரின் பெயர்.

 

கொழும்பு பெளஸிக்கு கல்குடாவில் பெளஸி மாவத்தை இருக்கும் போது! ஏன் கல்குடாவின் அரசியல் வரலாற்று நாயகன் மர்ஹும் முஹைதீன் அப்துல் காதர் அவர்களின் பெயரில் மாவத்தை இருக்ககூடாது???

 

கல்குடாவின் சமூகத்தை இப்படித்தான் ஒற்றுமை படுத்துவது என்று வரலாற்றில் அழிக்க முடியத ஏட்டினை பதித்து கல்குடாவில் இருந்து  முதலாவதாக மாகான சபைக்கு தெரிவானவரும், 1994ம் தொடக்கம் 5 வருடங்கள் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளராக இருந்தவரும், அதைத் தொடர்ந்து இரண்டு முறைகள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தி தற்போதைய அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸ அவர்களின் அமைச்சில் கல்குடா பிரதேசத்தின் முதாலாவது பிரதி அமைச்சராகவும் பனியாற்றிய மர்ஹும் முக்ஹைதீன் அப்துல் காதரின் ஞாபகர்த்தமாக அவருடைய பெயரில் ஒரு வீதிகூட இல்லாதது பெரும் கவலைக்குறிய விடயமாகவும் ஆழமாக சிந்திக்கக்கூடிய விடயமாகவும் காணப்படுகின்றது.

 

இதனை உடநடியாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் அவர்களுடைய மேலான கவனத்தில் கொண்டு எமது பிரதேசத்தில் உள்ள முக்கியமான வீதி ஒன்றுக்கு அன்னாருடைய ஞாபகர்த்தமாக அவருடை பெயரை இட வேண்டும் என்பது அவரின்மேல் அன்பு வைத்திருக்கின்ற கல்குடா பிரதேச மக்களின் விருப்பமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தொன்று இருக்க முடியாது.

 

34

 

30.

 

31

 

32

 

33

 

 

Web Design by Srilanka Muslims Web Team