கொழும்பு மாவட்டத்தில் விமல் வீரவன்ஸ தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றால் மேயர் பதவியை துறப்பேன்: கடுவலை மேயர் - Sri Lanka Muslim

கொழும்பு மாவட்டத்தில் விமல் வீரவன்ஸ தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றால் மேயர் பதவியை துறப்பேன்: கடுவலை மேயர்

Contributors
author image

Editorial Team

அமைச்சர் விமல் வீரவன்ஸ, கொழும்பு மாவட்டத்தில்,  தனித்து தனது கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் பஞ்சாயுதம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், தான் கடுவலை மாநகர மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜீ.எச். புத்ததாச தெரிவித்துள்ளார்.

 

கடுவலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் வாக்குகளை பெற்றே விமல் வீரவன்ஸ வீரதீரம் பேசி வருகிறார்.

 

ஊவா மாகாண சபைத் தேர்தலில் இதனை காண முடிந்தது.

 

மொனராகலையில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட விமல் வீரவன்ஸவின் கட்சியில் ஒருவர் தெரிவாகினார்.

 

பதுளையில் தேசிய சுதந்திர முன்னணியின் பஞ்சாயுத சின்னத்தில் போட்டியிட்டவர்கள் கட்டுப் பணத்தையும் இழந்துள்ளனர் எனவும் புத்தாச தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team