கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் இராஜினாமா ? - Sri Lanka Muslim

கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் இராஜினாமா ?

Contributors

 

qout322

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் இராஜினாமா செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

மேல் மாகாண சபை தேர்தலில் தனது பாரியர் பெரோஸா முஸம்மில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி சந்தர்ப்பம் வழங்காததை அடுத்தே அவர் இராஜினாமா செய்யவுள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

 

 

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழுவிலிருந்து பெரோஸா முஸம்மில் நேற்று இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் சிபாரிசின் அடிப்படையில் கொழும்பு மேயரின் இணைப்புச் செயலாளராக செயற்பட்ட எஸ்.எம்.எம்.இஸ்மத் நேற்று முதல் மேயர் முஸம்மிலினால் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team