கொழும்பு-12, வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரி: சித்தி பெற்ற மாணவிகளுக்கு மடிக்கணனிகள் அன்பளிப்பு » Sri Lanka Muslim

கொழும்பு-12, வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரி: சித்தி பெற்ற மாணவிகளுக்கு மடிக்கணனிகள் அன்பளிப்பு

Rumaisa

Contributors
author image

A.S.M. Javid

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் அல்-ஹிக்மா கல்லூரியின் பழைய மாணவர்கள் தமது பாடசாலைக்கு பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்த வகையில் மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்தும் வகையில் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் க.பொ. சாதாரண தரத்தில் 9ஏ சித்தியும், உயர்தரத்தில் 3ஏ சித்தியும் பெறும் மாணவர்களுக்கு மடிக் கணனிகள் அன்பளிப்புச் செய்வதாக வாக்குறுதியளித்துள்ளனர்.

22ம் திகதி பழைய மாணவர் சங்க உபதலைவர் கலாநிதி எச்.எம்.ஹஸன் இஸ்மத், பொதுச் செயலாளர் என்.ஏ.எம்.ஸாதிக் ஷிஹான் ஆகியோர் தலைமையில் கடந்த 2015ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர்த்தில் 9ஏ சித்தி பெற்ற எம்.என்.எப். ஸெய்னப் மற்றும் க.பொ.த. உயர் தரத்தில் 3ஏ சித்தி பெற்ற எம்.ஆர்.எப். றுமைஸா ஆகிய இருவருக்கும் மடிக் கணனிகள்; அன்பளிப்புச் செய்யப்பட்டன. அல் -ஹிக்மா கல்லூரியில் நேற்று இடம் பெற்ற நிகழ்வில் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

2017ஆம் ஆண்டில் அல்-ஹிப்மா கல்லூரியில் ஒரு மாணவன் உட்பட 4பேர் 9ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். முதல் முதலாக ஆண் மாணவன் ஒருவர் இப்பாடசாலையில் 9ஏ சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு விரைவில் நடாத்த பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஏற்பாடுகளைச் சய்து வருகின்றனர்.

Rumaisa Zainab

Web Design by The Design Lanka